Thursday, April 18, 2013

பேருந்து பயணம்




இருக்கைக்கான சண்டையில்
முதலில் துண்டு போட்டவனே
வென்றான் ஓரிருக்கையில்

வசை சொற்கள்
பேசியவனே வென்றான்
மற்றொன்னில்

சில்லறை பாக்கி
தராத நடத்துனரை
நொந்தபடியே சென்றான்
இன்னொன்றில்

சாலையில் தவறுதலாய்
குறுக்கே சென்ற சிறுவனின்
தாயை ஏசியபடியே
இழுத்தான் ஆறுசக்கர தேரை
ஓட்டுனரிருக்கையில்

இன்னும் பலர்
சொல்லக்கூடாதவைகளை
செய்தபடியே சென்றார்கள்
முன்னும் பின்னும்

வேருகடலை தோல்,
காய்ந்த மல்லி,
தண்ணீர் பாக்கெட்,
கிழிந்த காகிதங்களுடன்
பயணிக்கிறது பேருந்து
பல உயிருள்ள
குப்பைகளை சுமந்தபடி.


நன்றி: கீற்று

Wednesday, November 2, 2011

பலி ஆடு

 
 
கோவில் திருவிழா
ஒருமணி நேரம் ஆகியும்
ஆடு சம்மதம் தரவில்லை
இம்முறை தண்ணீர்
காதுகளுக்குள் சென்றுவிட
தன் வாழ்நாளை
ஒரு மணிநேரம் மட்டும்
நீட்டித்து கொண்டது

Tuesday, November 1, 2011

உனக்கான சில கிறுக்கல்கள்


தினமும் உன் முகத்தில்
விழித்தால் தான்
அன்றைய தினம்
நன்றாய் இருக்கிறதாம்
உன் வீட்டுக்
கண்ணாடிக்குகூட
**--**--**--**--**--**
நீ தூக்கி எறியும்
குப்பைகூட அழுகிறது
இன்னும் சிறிது நேரம்
உன் கரம் பற்றி
அதன் சாபம்
நீக்கிக் கொள்ளலாம் என்று.

**--**--**--**--**--**
நீ பேசும்
வார்த்தைகளை
எப்படி கோர்த்தாலும்
கவிதை பூவாகவே
தெரிகிறது எனக்கு

**--**--**--**--**--**

நீ பேசா
வார்த்தைகள்
மௌனத்தை விட
சத்தமாய்
கேட்கிறது எனக்கு

**--**--**--**--**--**

உன் பார்வையின்
அர்த்தம் புரிந்து
சொன்னதையும் செய்கிறேன்
சொல்லாததையும் செய்கிறேன்
எங்கு நோக்கு வர்மம் கற்றாய்?

**--**--**--**--**--**

உனக்கான கவிதைகளை
எழுத ஆரம்பித்த பிறகு
நேரம் போவதும்
தெரியவில்லை
தூங்க மறந்ததும்
நினைவில்லில்லை

**--**--**--**--**--**

தினமும் இரவு ஒரு மணிக்கு
நான் தூங்கமறந்ததை
நினைவுபடுத்துவாய்
இன்று நீ
நினைவுபடுத்த மறந்ததால்
இன்னும்
ஒரு மணியாகவில்லை எனக்கு
சேவல் கூவிய பிறகும்

**--**--**--**--**--**

நீ பறிக்கத் தவறிய
பூக்களை
ஒருமுறையாவது
பார்த்துவிட்டு போ
அதன்
பிறவி பயனையாவது
அடையட்டும்

**--**--**--**--**--**

படைப்பு

 
 
இயற்கையின் படைப்பில்
சிறந்தது
விரல்களுக்கு இடையேயான
இடைவெளி
நீ என்
கைக் கோர்த்தபின்
உணர்ந்தேன்

மழலை நம்பிக்கை




துரு பிடித்த
ஜாமெட்ரி பாக்ஸ்
ஒன்றை பல்லால்
கடித்து திறந்த

சிறுமி
தினமும்
அரிசி போட்டாள்
என்றாவது ஒரு நாள்
மயிலிறகிலிருந்து மயில்
வருமென நம்பிக்கையில்.

நன்றி: திண்ணை

பணம்

மனிதன் படைத்த
மிக விலை உயர்ந்த
சிறிய காகிதம்

Sunday, October 23, 2011

நினைவில் வந்தது


என் முதல்
கவிதையை
வலைப்பூவில் போட
சிறந்த கவிதைகளை
தேடி தேடி
தோற்று போன
எனக்கு
நினைவில் வந்தது
உன் பெயர் மட்டுமே.